Friday, January 15, 2016

What is the link between Sangu and Tamil culture? சங்கும் தமிழர்களும் என்ன தொடர்பு ?

திருவள்ளுவர் புத்தாண்டு சிறப்பு பதிவு :)

சிந்து சமவெளி திராவிடர் நாகரிகம் முதல் சங்க காலம் வரை சங்கால் செய்யப்பட்ட ஆபரணங்கள் தமிழர்கள் வாழ்வில் முக்கிய இடம் பெற்றிருந்தன




சிவபெருமான்:
அங்கம் புழுதிபட, அரிவாளில் நெய்பூசி
பங்கம் படவிரண்டு கால் பரப்பி – சங்கதனைக்
கீர்கீர் என அறுக்கும் நக்கீரனோ எம்கவியை
ஆராய்ந்து சொல்லத் தக்கவன்?

நக்கீரன்:
சங்கறுப்பது எங்கள் குலம்,
சங்கரனார்க்கு ஏது குலம்? – சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனே உம் போல்
இரந்துண்டு வாழ்வதில்லை..!!!

பொருள்: நக்கீரனின் குல தொழில் சங்கை அறுத்து வளையல் செய்து விற்பது. அதை தான், சிவனார், உடலெல்லாம் புழுதிபட, சங்கு பொறுக்கி, அரிவாளில் நெய் தடவி(அறுக்கும் போது, சங்கின் துகள் சிதறாமல், பறக்காமல் அரிவாளுடன் ஒட்டிக்கொள்ளும்), சங்கினை இரண்டாக பங்கம் செய்ய உன் கால்கள் இரண்டையும் பரப்பி, கீர் கீறென்று சங்கை கீறும் நக்கீரனோ என் பாடலில் பிழை சொல்வது? என்றார்.

அதற்கு மறுமொழி, "சங்கு அறுப்பது எங்கள் குலம், ஆனால் சிவனாகிய உனக்கு என்ன குலம் இருக்கிறது. மேலும் சங்கினை அறுத்து உழைத்து சாப்பிடுவது எங்கள் பழக்கம் ஆனால், சிவனாரே!, அந்த சங்கினை பிச்சைப்பாத்திரமாக்கி இரந்துண்டு(பிச்சை பெற்று) உண்ணுதல் உன்னுடைய வழக்கம்" என்று கூறுகிறார்.

இந்த வசனம், தனி பாடல் திரட்டு என்று பாடல் தொகுதியில் இருந்து கையாளப்பட்டது.
அங்கம் வளர்க்க அரிவாளின் நெய்தடவிப்
பங்கப் படஇரண்டு கால்பரப்பிச் – சங்கதனைக்
கீருகீர் என்று அறுக்கும் கீரனோ என்கவியைப்
பாரில் பழுதுஎன் பவன்
சங்கறுப்பது எங்கள்குலம் சங்கரர்க்கு அங்கு ஏதுகுலம்
பங்கமுறச் சொன்னால் பழுதாமோ – சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
இரந்துண்டு வாழ்வோம்...


மேலும் பட பாடல்களிலும் சங்கு என்பது ஆபரணம் என்ற பொருளில் உள்ளது. குற்றாலக்குறவஞ்சியில் வரும்
இந்திரையோ இவள் சுந்தரியோ தெய்வ
ரம்பையோ மோகினியோ – மனம்
முந்தியதோ விழி முந்தியதோ கரம்
முந்தியதோ எனவே – உயர்
சந்திர சூடர் குறும்பல ஈசுரர்
சங்கணி வீதியிலே – மணிப்
பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி
பொற்பந்து கொண்டாடினளே!
பாடலில் ஆபரணம் அணிந்து அரசன் உலாவருவது சங்கணிந்து வருவதாக உள்ளது. மேலும் ஒரு பாடல்.
வெற்றிமதன் போர்க்காயம் பிறைக்குங் காலம்
        வெங்கனலே போற்காயம் பிறைக்குங் காலம்
சற்றுமிரு கரமென்னே சங்கணியாக் காலம்
        தலைவர்துறை மறந்தென்னே சங்கணியாக் காலம்
கற்றைநெடுஞ் சடைமுடியா ரடியார்மேன் முழுதுங்
        கருணைநாட் டம்புரியு மருணைநாட் டுறையும்
பெற்றவிளந் தென்றன்மறு கிடத்தியங்குங் காலம்
        பேதையேன் சிந்தைமறு கிடத்தியங்குங் காலம்.    

(
வெற்றிமதன் போர்க்காயம் பிறைக்குங் காலம் - மன்மதன் அம்பு இறைக்கும் காலம்
வெங்கனலே போற்காயம் பிறைக்குங் காலம் - கனல் போல் நிலா பொழியும் காலம்
சற்றுமிரு கரமென்னே சங்கணியாக் காலம் - இரு கரங்களூம் ஆபரணங்கள் அணியா காலம்
தலைவர்துறை மறந்தென்னே சங்கணியாக் காலம் - என் நேசம் கணியா காலம்
)



1 comment: