Saturday, January 23, 2016

நெஞ்சே எழு! இளையராஜா தாரை தப்பட்டை சல்லிக்கட்டு தடை

From January 16 at 1:16pm

Superb performance by @actor_jayamravi And @trishtrashers in ‪#‎Bhooloham‬. . . must watch movie by ‪#‎SPJananathan‬

From January 16 at 1:21pm
3D printing of save icon

From January 16 at 9:44pm

Is @arrahman wearing a type of @googleglass instead of teleprompter at ‪#‎YMCA‬ ‪#‎Nenjae‬ Ezhu concert ‪#‎dills‬e

From January 16 at 9:48pm
Balachandar Muruganantham
One part of the India talking about Startups.
But failed to preserve Agriculture / Farming of India which is the oldest Startup by many.

நெஞ்சே எழு!

From January 17 at 12:53am
R Prabhakar
இளையராஜாவை நேர்காணல் செய்கிற யாரும் அவரை நாற்காளியில் அமர வைத்து நேர்காணல் செய்வதில்லை.
எப்பொழுதும் கர்ப்பகிரஹத்தில் அமர வைத்தே நேர்காணல் செய்கிறார்கள்.
இதன் விளைவு சகஜமான உரையாடலையே இளையராஜா முற்றிலும் மறந்து போயிருக்கிறார்..
யாராவது தற்செயலாக ஒரு அறிவுப்பூர்வமான கேள்வி கேட்டாலும் அதை அமெச்சூர் ஆன்மிக உரையாடலாக மாற்ற முயற்சி செய்கிறார்.
இந்த பாட்டிற்கு ஏன் இந்த ராகத்தைப் பயன்படுத்தினீர்கள்.. இது தவறில்லையா? இப்படி மாற்றி செய்வது சரியா? ஏன் ஒரு பாடல் ஆசிரியரிடம் இவ்வளவு பெரிய பகை கொண்டிருக்கிறீர்கள்? மணிரத்தினத்தை வெளியில் நில் என்று சொல்லி விட்டீர்களாமே, பாலசந்தருக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை? உங்களோடு நல்ல நட்பு பாராட்டிக்கொண்டே தங்கள் படங்களுக்கு வேறு இசையமைப்பாளரை பயன்படுத்தும் ரஜினி கமல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் அவுட் டேடட் ஆகி விட்டீர்களா? நீங்கள் வாசித்த சிம்ஃபொனி என்ன ஆயிற்று? அது சிம்ஃபோனியே இல்லை என்கிறார்களே என்றெல்லாம் இளையராஜாவிடம் கேட்பதற்க்கு ஒரு கேள்வியுமா இல்லை?
இசை பற்றிய ஞானம் இல்லாத தற்குறிகளே எப்பொழுதும் இளையராஜாவை நேர்காணல் செய்வதும் இதற்க்கு இன்னொரு முக்கியமான காரணம்.
நிறைய பேர் இப்படியெல்லாம் கேள்வி கேட்காமல் இருப்பதுதான் இளையராஜாவிற்கு மரியாதை செய்வது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது உண்மையில் இளையராஜாவை குளி தோண்டிப் புதைப்பது.
இளையராஜாவின் பரம விசிறியாக காட்டிக் கொள்கிற நிறையபேருக்கு இளையராஜா ஏன் சிறந்த இசையமைப்பாளர் என்றே தெரியாது. அவர்கள் காட்டுகிற மயக்கம் வெறும் பாவ்லா.
யாராவது இளையராஜாவை மனிதராக மதித்து ,அவருடைய சாதனைகளை ஒரு மகத்தான மனிதனின் சாதனைகளாக கருதி அவரை நேர்காணல் செய்தால் அது இசையுலகத்திற்கு செய்யும் நற்காரியமாக இருக்கும்.
பாரதிராஜா கதை, பாவலர் கதையெல்லாம் முப்பதாண்டுகள் அரசப் பழசு! கேட்கும் போதே புளிக்கிறது!

தாரை தப்பட்டை - படம் - நம் கருத்து
-----------------------
அடிப்படையில் ஒருவன் தான் காதலிக்கும் பெண், தன்னை மணந்து வறுமையில் வாட கூடாது என நினைத்து வேறு ஒருவனுக்கு திருமணம் முடிப்பதுதான் கதை. அந்த வேறு ஒருவன் ஒரு வில்லனாக இருப்பது திரைக்கதை. 
படத்தின் கடைசி 30 நிமிடங்கள் சினிமா... அதைவிட்டு பார்த்தால், படம் ஒரு நல்ல படம்.
வரலக்ஷ்மி நன்றாக நடித்திருக்கிறார். சசிகுமார் ஓகே. 
பாலா நல்ல மன நல மருத்துவரை சீக்கிரம் பார்க்க வேண்டும்


சல்லிக்கட்டில் நாங்கள் கலந்து கொள்வதில்லை அதனால் சல்லிக்கட்டு தடையை கொண்டாடுகிறோம் - ஒரு சாதியினர் 
இப்படியே போனால் அடுத்து 
மாட்டுக்கறி நாங்கள் சாப்பிடுவதில்லை அதனால் மாட்டுக்கறி தடையை கொண்டாடுகிறோம் - இன்னொரு சாதியினர் 
இதில் யார் நினைத்தது நடக்கிறது ? எங்கிருந்தோ ஒருவன் ஆட்டும் பொம்மைகளாக நம்மை அறியாமலேயே அல்லது அறிந்தும் எத்தனை நாள் ஆட போகிறோம் ?எங்கோ நடக்கும் ஒன்றிரண்டு கசப்பான நிகழ்ச்சிகளை விடாமல் நினைவு கூர்ந்து பொது பிரச்சனையில் பிரிந்தே இருக்க வேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டால் ..................................இப்படித்தான் நடக்கவேண்டும் என்று நினைத்து காயை நகட்டி கொண்டிருக்கிற யாரோ ஒருவர் தான் வெற்றி காண போகிறார்

Polymorphism of bovine beta-casein its potential effect on human health. https://t.co/Zj4loaNNZi ( CVD and type 1 diabetes ) ‪#‎jallikattu‬

https://t.co/tQdaaS4Nri A1 beta-casein is that the 67th amino acid switch from proline to histidine ‪#‎jallikattu‬
ஒவ்வொரு குடும்பமும் ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கு பால் வாங்குகிறது என்று வைத்துக்கொண்டால் 
தமிழ் நாட்டில் இருக்கும் 2 கோடி குடும்பங்களின் ஒரு நாள் பால் வியாபாரம் 40 கோடி 
வருடத்திற்கு 14600 கோடி. 
இது சின்ன தொகை கிடையாது. கிட்டத்தட்ட தமிழக அரசின் வருடாந்திர செலவில் 10 சதவிதத்திற்கும் அதிகமானது 
-oOo-
தமிழர்களின் பால் வியாபாரத்தை அழித்து, உள்ளே வருபவர்களின் வருடாந்திர வியாபாரம் 15000 கோடி என்றால் வருட லாபம் 3000 கோடி
-oOo-
கோலா நிறுவனங்கள் சச்சினுக்கும் பூஸ்ட் நிறுவனம் கபில்தேவிற்கும் தொலைகாட்சி விளம்பரங்களுக்கும் வருடந்தோறும் கோடிக்கணக்காக கொடுத்து அவர்கள் தயாரிப்பை விற்கிறார்கள் 
கோலா நிறுவனங்களை விட பல மடங்கு புத்திசாலியான பன்னாட்டு பால் நிறுவனங்களோ, ஒரே ஒரு முறை 2 கோடி மட்டும் செலவழித்து நிதிமன்றம் சென்று வருடந்தோறும் 3000 கோடி லாபம் பெற முயல்கிறார்கள் 
-oOo-
1990களில் கோலா நிறுவனங்கள் இந்தியாவிற்குள் கால் எடுத்து வைத்த போது, காளிமார்க் போவாண்டோ போன்ற நிறுவனங்களில் கண்ணாடி பாட்டில்களை மொத்தமாக வாங்கி உடைத்தது ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே . . . .
-oOo-
ஜல்லிக்கட்டால் எற்பட்டும் உயிரிழப்புகள் மற்றும் உடல்காயங்கள் தவிர்ப்பதும், நமது பால் மற்றும் உணவுகள் பன்னாட்டு நிறுவனங்களில் பிடிக்குள் செல்லாமல் தவிர்ப்பதும் இணைந்து செயல்படுத்தப்படவேண்டிய விஷயங்கள்

https://t.co/9zIrjUmMAr A1 one of the common variants of beta-casein --> type I diabetes (DM-I). ‪#‎jallikattu‬

No jallikattu- no bulls- no cows-no milk! (If there is no jallikattu, what will happen to the bulls . . They will be sold for slaughter, isn't it by Mariano Anto Bruno Mascarenhas) ! No pass- no study- no work- be a burden! LOL

"These days it is not the land with the bigger army that wins, but the country with the better story to tell the world"
Shashi Tharoor
தாரை தப்பட்டை:
விழுமியச் சீரழிவுகளை உடைத்துச் சொல்லும், ஆகச்சிறந்த படைப்பாக்கம்.
1.உள்ளார்ந்த பாசத்தால், விரும்பியவளுக்கு நல்லது நடக்கட்டுமே என உணர்ச்சிவசப்பட்டு, தவறான முடிவினை ஒருபோதும் எடுத்துவிடக்கூடாது.
2.நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்கிற ஏக்கநிலையில், விசாரித்து உண்மையை அறிந்துகொள்ள முயற்சிக்காமல், எவரையும் பாழும் சகதியில் தள்ளிவிடுவதைவிட, ஏழ்மை மேலானது.
3.தவறு நடந்துவிட்டதை உணர்ந்த பின்பும், அதை வெளியில் சொல்லாமல், மூடி மறைத்து மருகவோ, வெட்டி கௌரவம் பார்க்கவோ கூடாது.
சாமிபுலவர், சன்னாசி, சூராவளி என கதைக்களம் வாழ்க்கையாக விரிகிறது. ஒரு கரகாட்டக் குழுவின் சீரழியும் வாழ்க்கை படமாக கண் முன் ஓடுகிறது.
தன் கலையை காசுக்கு விற்க மனம் ஒப்பாத மூத்தவர் சாமிபுலவர். இதிலிருந்து கொஞ்சம் நீர்த்துப்போன சன்னாசியின் பொழுதுபோக்கு கலை. சன்னாசி குழுவிலிருந்து பிரிந்து, வயிற்றுப் பிழைப்புக்காக அண்ணனும் தங்கையும் ஆடும் இரட்டை அர்த்த ஆட்டம் என, ஒரு கலை எப்படி எல்லாம் நீர்த்துப்போய், ஒரு குழுவின் வாழ்வு சீரழிகிறது என்பதே படம். இதில் மூன்றாந்தர சீரழிவின் எச்சங்களாக வந்திருப்பவை தான்; ரஜினிமுருகன், கதகளி, கெத்து ஆகியப் படங்கள்...!
தாரை தப்பட்டையின் கதாபாத்திரங்கள் எவருமே நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார்கள். படத்தின் கதையை நான் எழுதவிரும்பவில்லை, நீங்களே பாருங்கள்...!
படம் ஒரு வாழ்வியலாக ஓடட்டும், நம் திறமையை காணிக்கையாக அளித்துவிட்டு, பல அடி தூரத்தில் போய் நின்றுகொள்வோம் என்று, இயக்குநர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் எல்லோரும் இருந்திருக்கிறார்கள்.
2016 ஆம் ஆண்டு இப்போதுதான் பிறந்திருக்கிறது. என்றாலும், இந்த வருடத்தின் ஆகச்சிறந்த படமாக; தாரை தப்பட்டை மட்டுமே இருக்கும் என்று கருதுகிறேன். தமிழில் வேறு எந்த இயக்குநருக்கும் இப்படியொரு படம் எடுக்கும் திராணி இருப்பதாக நான் கருதவில்லை.
பாலா, இளையராஜா, செழியன் ஆகிய அனைவருமே ஆகச் சிறந்த திரைப்பட கலைஞர்கள்.
பாலா ஒரு மகா கலைஞன். மற்ற திரைக்குப்பைகளை பார்க்கிறீர்களோ இல்லையோ...! அவசியம் தாரை தப்பட்டை பாருங்கள்.
கணேஷன் குரு

No comments:

Post a Comment